ஆலம்பனாவில் வைபவ் ஜோடியாக பார்வதி

அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடி இருக்கின்றனர். அதுபோன்ற அபூர்வ கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது, ஆலம்பனா. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்க, பாரி கே.விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய  படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Advertising
Advertising

வைபவ் ஹீரோ. அவருக்கு ஜோடி, பார்வதி நாயர். மற்றும் முனீஸ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், முரளி சர்மா, கபீர் துஹான் சிங் நடிக்கின்றனர். நெடுநால்வாடை வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கிறார்.

Related Stories: