சூப்பர் ஸ்டார் தீபாவளி கிஃப்ட்...

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் முடிவடைந்திருக்கிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த ரஜினிகாந்த் அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்காத நிலையில் அவ்வப்போது படம் பற்றிய தகவல்களை முருகதாஸ் தெரிவித்து வருகிறார். இந்த தீபாவளிக்கு ரஜினி நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் ரசிகர்களுக்கு  தீபாவளி விருந்தாக தர்பார் படத்திலிருந்து ரஜினிகாந்த்தின் புதிய தோற்ற ஸ்டில் வெளிப்பட்டுள்ளது. அதை ரஜினி ரசிகர்கள் நெட்டில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories: