ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகும் நந்திதா

பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்து கவர்ந்தவர் நந்திதா. அடுத்தடுத்து கனம் இல்லாத வேடங்களில் நடித்துவந்தவர் திடீரென்று, ‘ஐபிசி 376’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக  மாறியிருக்கிறார். கே.தில்ராஜ் ஒளிப்பதிவு. எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தில் விஜயசாந்தி அதிரடி போலீஸாக நடித்ததுபோல் இப்படத்தில் நந்திதா அதிரடி போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார்.

இதற்காக சண்டை பயிற்சி பெற்று ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,’இதுவரை நான் நடித்த வேடங்களில் இது முற்றிலும் புதியது. 4 சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தபோது சில சமயம் காயம் ஏற்பட்டாலும் பயந்துவிடாமலும், டூப் போடாமலும் நடித்துள்ளேன்.

இது எனக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. இதுவொரு சஸ்பென்ஸ் ஹாரர் படம். ஐபிசி 376 என்ற பட டைட்டில், பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. படத்தின் தலைப்பே  பெண்கள் மீதான  அக்கறையை உணர்த்தும், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு பகுதிகளில் நடைபெற்றுள்ளது’ என்றார்.

Related Stories: