ராஜமவுலி படத்துக்கு திடீர் எதிர்ப்பு; ஷூட்டிங்கை நிறுத்த கேட்டு அதிகாரியிடம் புகார்

பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்துக்கு பிறகு ஒரு வருடம் கழித்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. இதில் ராம்சரண், ஜூனியர்என்டிஆர் ஹீரோக் களாக நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயின். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த சரித்திர பின்னணி கதையாக உருவாவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் மீது ஆந்திர மாநிலம் நரசிம்பட்டணம் ஆர்டிஓவிடம் அல்லூரி சீதா ராமராஜு இளைஞர் சங்க தேசிய தலைவர் வீரபத்ரா என்பவர் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பை தடை செய்யக் கேட்டு புகார் அளித்திருக்கிறார். அதில்,’அல்லூரி சீதா ராம ராஜு அவரது உறவினர் கோமரம் பீம் ஆகியோரின் கதையாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமவுலி இயக்குகிறார்.

ஆனால் நிஜத்தில் அவர்கள் பிறந்த இடம் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை படத்தில் தவறாக சித்தரிக்கிறார்கள். எனவே படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தை பொறுத்தவரை ஒரு கற்பனை கதை என்று ஏற்கனவே ராஜமவுலி தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: