மும்பையை சேர்ந்த தொழிலதிபருடன் தமன்னாவுக்கு திருமணம் என தகவல் பரவியுள்ளது. விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். குயின் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.