இளம் நடிகையின் திருமண ஆசை

கல்யாணம் பற்றி கேட்டால், அதுபற்றி 3 வருடத்துக்கு பேசாதீங்க என்று பல நடிகைகள் எஸ்ஸாகிவிடுகின்றனர். திருமணம் என்று பேச்சு வந்தால் அத்துடன் பட வாய்ப்புகள் நின்றுவிடும் என்ற பயம்தான் இதற்கு காரணம். சில நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் பற்றி யோசிக்காமலிருந்தாலும் சமந்தா, நஸ்ரியா, சுவாதி போன்ற நடிகைகள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவர்களைவிடவும் ஜூனியர் ஜான்வி.

Advertising
Advertising

இப்போதுதான் அதாவது கடந்த ஆண்டுதான் (2018) தடக் படத்தில் அறிமுகமானார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். தாய் ஸ்ரீதேவிபோல் சாதிக்க வேண்டிய பணி இன்னும் நிறைய இருந்தாலும் திருமணத்தை எங்கு நடத்துவது என்று இப்போதே அவர் முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் மணமகள் என்ற ஆங்கில இதழுக்கு பட்டுச் சேலை அணிந்து விதவிதமாக போஸ் அளித்தார். பிறகு ஜான்வி கூறும்போது,’என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் எற்கனவே முடிவு செய்துவிட்டேன். அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில்தான் திருமணம் செய்து கொள்வேன். அதுதான் எனது கனவு’ என்றார்.

Related Stories: