நடிகையின் மழை நடனம்

நடிகை ஸ்ரேயா கடந்த 15 வருடத்துக்கும் மேலாக நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுடன் ேஜாடி போட்டவர் ஒரு கட்டத்தில் காமெடி நடிகருடன் நடித்திருந்தார். தமிழில் மழை படம் மூலம் கதாநாயகியானார். அப்படத்தில் எங்கெல்லாம் மழை பொழிவதை பார்க்கிறாரோ அங்கெல்லாம் உடனே நடனம் ஆடத் தொடங்கிவிடுவார். கதாபாத்திரத்துக்காகத்தான் இப்படி செய்தார் என்று எண்ணினால் நிஜத்திலேயே அவர் மழையை கண்டால் நடனம் ஆடுவார் என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

Advertising
Advertising

கடந்த சில வாரங்களாக ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து நகரையும். கடற்கரையின் எழிலையும் ரசித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. சில நாட்களுக்கு முன்பு கடற்கரைக்கு சென்றவர் மேகம் இருட்டிக்கொண்டு வருவதை கண்டதும் பீச்சிலேயே டூ பீஸ் உடையில் இடுப்பை அசைத்து நடனம் ஆடத் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் நேற்று அவர் அங்குள்ள வீட்டில் தங்கியிருந்தபோது மாடியின் பால்கனி பகுதிக்கு வந்தார். திடீரென்று மழை பெய்யத் தொடங்கியதும் உடனே நடனம் ஆடத் தொடங்கிவிட்டார். கிக்கான அந்த நடனத்தை வீடியோவாக படமாக்கி நெட்டில் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories: