அஜீத் போல் நடிக்க தனுஷ் விருப்பம்

நேரடி கதைகளில் நடித்து வந்த அஜீத் சமீபத்தில் நடித்த, நேர் கொண்ட பார்வை, இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் ஆக உருவானது. ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்தார். வினோத் இயக்கினார். அடுத்து அஜீத்துக்காக புது ஸ்கிரிப்ட் உருவாக்கி வைத்திருப்பதாக வினோத் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் போனிகபூர் இந்தியில் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.

Advertising
Advertising

சவாலான வசனங்கள் நிறைந்த நேர் கொண்ட பார்வை ரீமேக்கில் நடித்ததுபோலவே ஆர்ட்டிக்கிள் 15 படத்திலும் அஜீத் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று போனிகபூர் கருதுகிறார். ஏற்கனவே போனிகபூருக்கு 3 படங்களில் நடித்து தருவதாக அஜீத் கூறியிருப்பதால் இந்த படத்திலும் அவரை நடிக்க கேட்ட தாக கூறப்படுகிறது.

ஆனால் அடுத்து நேரடி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்படம்பற்றி முடிவெடுக்கலாம் என்று அஜீத் கூறிவிட்டதாக தெரிகிறது. அஜீத்தையே இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு காரணம் ஆர்ட்டிகள் 15 கதை இந்திய சட்டப் பிரிவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்கிரிப்ட். இதிலும் அதிரடியான வசனங்கள் இடம் பெறும் அதை அஜீத் பேசினால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறார்களாம். இதற்கிடையில் ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக்கில் நடிக்க நடிகர் தனுஷும் ஆர்வமாக உள்ளாராம்.

Related Stories: