ரூ.78 கோடி சொகுசு பங்களா வாங்கிய கிரித்தி சனோன்

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை கிரித்தி சனோன், தற்போது இந்தியில் தனுஷ் ஜோடியாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் சில நடிகைகளில் ஒருவரான அவர், மும்பையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான பாந்த்ரா பாலி ஹில்லில், கடற்கரை அருகே சொகுசு பங்களா வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு 78.20 கோடி ரூபாய் என்றும், இந்த பங்களா 7,302 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு 6 கார் பார்க்கிங் வசதி இருக்கிறது. நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட இந்த பங்களாவுக்கு 3.91 கோடி ரூபாய் முத்திரை வரியும், 30 ஆயிரம் ரூபாய் பதிவுக்கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. கிரித்தி சனோன் பெண் என்பதால், ஒரு சதவீத வரி தள்ளுபடி கிடைத்துள்ளது.

Related Stories: