மும்பை: பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சொந்தமாக யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘ஆமிர் கான் டாக்கீஸ்’ என்று இந்த சேனலுக்கு பெயர் வைத்துள்ளார். இனிமேல் தனது தயாரிப்பில் வெளியாகும் படங்களை இந்த சேனலில் வெளியிடவும் மக்கள் குறைந்த கட்டணம் செலுத்தி இந்த படங்களை பார்த்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக அண்மையில் தான் நடித்து தயாரித்த ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த சேனலில் வெளியிட இருக்கிறார். திரையரங்கில் ரூ.250 கோடி வசூலித்த இந்த படத்தை ரூ. 100 கட்டணமாக செலுத்தி மக்கள் இந்த படத்தை பார்க்கலாம். இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா , ஜெர்மனி, ஃபிலிபைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 38 நாடுகளில் கட்டணம் செலுத்தி மக்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.
