பாட்டி வேடத்தில் நடித்தது எப்படி? ஷில்பா மஞ்சுநாத்

காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை தொடர்ந்து ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம், பேரழகி ஐ.எஸ்.ஓ. இதில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: முதல் முறையாக இரண்டு வேடங்களில்  நடித்தது, உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருந்தது. கதைப்படி  என் பாட்டி சச்சு, ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம் பெண்ணாக மாறுகிறார்.

எனது  உருவத்தில் சச்சுவின் மேனரிசங்களை,  அவரது பாடிலாங்குவேஜை, வசனம் பேசும்  விதத்தை சரியாக  செய்ய வேண்டியிருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு  கேரக்டர்களுக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டதால், அவற்றுக்கான உடைகள்,  வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும்  எனக்கு இந்த வேடம் சவாலாக அமைந்தது.

Related Stories: