வெனிசுலா பட விழாவில் ஞானச்செருக்கு

அறிமுக இயக்குனர் தரணி  ராசேந்திரன் இயக்கியுள்ள படம், ஞானச்செருக்கு. மறைந்த ஓவியர் வீரசந்தானம் நடித்து இருக்கும் இப்படம் பற்றி தரணி ராஜேந்திரன் கூறும்போது, ‘கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே உருவான படம்தான் ஞானச்செருக்கு. இதில் எனது கதை மற்றும் நண்பர்களின் கதை என, வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே படமாக்கியுள்ளேன்.

‘60 வயதாகும்போது நான் எப்படி இருப்பேன்?’ என்ற பலபேருடைய கேள்விக்கான பதிலாக இப்படம் இருக்கும். பல நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பினேன். வெனிசுலாவில் சிறந்த படம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் படம் விருதுகளை வென்றது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. விரைவில் ரிலீசாகிறது’ என்றார்.

Related Stories: