ஸ்டன்ட் கலைஞர் குடும்பத்துக்கு சிம்பு நிதியுதவி

சென்னை: பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கார் ஒன்று அந்தரத்தில் பறந்து வந்து தரையில் விழுவதுபோல் காட்சி. இந்த காட்சியை படமாக்கும்போது, கார் தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த ஸ்டன்ட் கலைஞர் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது குடும்பத்துக்கு சிம்பு, ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். மோகன்ராஜின் மகன் மனோஜின் படிப்பு செலவுக்கு ரூ.25 ஆயிரத்தை நடிகர் தக்‌ஷன் விஜய் கொடுத்துள்ளார்.

Related Stories: