ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட பெண் போன்று காட்சியளிக்கும் தீபிகா படுகோன்

ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் சபாக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ராசி படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி சபாக் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சபாக் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திபீகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டரில் தீபிகாவின் ஒப்பனையையும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பாராட்டி தீபிகா படுகோனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: