கற்பகாம்பாள் வழிபாடு மந்திரம்

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உருவானாய் போற்றி

பாகம் பிரியா பராபரை போற்றி

ஆகமமுடிமேல் அமர்ந்தாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி

சுடராய் விளங்கும் தூமணி போற்றி

இல்லக விளக்காம் இறைவி போற்றி

நல்லக விளக்காம் நாயகி போற்றி

தீது எல்லாம் தீர்க்கும் திருவே போற்றி

ஆறுதல் எமக்கு அளிப்பாய் போற்றி

தாயே மலைமகளே நின் அருள் தந்தருள் போற்றி

தூயநின் திருவடி தொழுதனம் போற்றி

கற்பகனைக் கடந்த கருணையே போற்றி

கற்பகாம்பிகைத் தாயே போற்றி போற்றி

Related Stories: