வெற்றி, தோல்வி நிறைய பார்த்துட்டேன்: விஜய் ஆண்டனி பேச்சு

சென்னை: எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து வெளியான இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “வெற்றி, தோல்வி என எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடப்போவதில்லை. கடவுளே வந்து ஹீரோவாக நடித்தாலும், இயக்குநரின் எழுத்தும், இயக்கமும் சரியாக இல்லாவிட்டால் எந்த படமும் ஓடப்போவதில்லை.

அதேபோல குரங்கு, கழுதைகளை வைத்து படம் எடுத்தாலும் இயக்குநரின் எழுத்தும், இயக்கமும் சிறப்பாக இருந்தால் படம் ப்ளாக்பஸ்டர் ஆகும்.அதற்கு உதாரணம் ராமநாராயணன். எந்தப் படம் ஓடினாலும் அந்தப் படத்துக்கான முழு அங்கீகாரம் இயக்குநருக்கதான் கொடுப்பேன். அந்த வகையில் இந்தப் படம் ஓடியதற்கு காரணம் லியோ ஜான் பால். அவர் திரைத்துறையில் எங்கோ இருக்க வேண்டியவர். தன் வேலைக்கு மிகவும் உண்மையாக இருக்க கூடியவர். படத்துக்கு மிகவும் உண்மையாக இருப்பார். யார் சொன்னாலும் கேட்கமாட்டார்’’ என்றார்.

Related Stories: