ஒரு விபத்தில் கார் ரேஸிலிருந்து ஒதுங்கிய ஹீரோ, மீண்டும் பந்தயத்துக்கு வந்து ஜெயிப்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படம் இந்தியாவில் மட்டும் படம் வெளியான ஜூன் 27 முதல் நேற்று வரை ரூ.30 கோடியே 27 லட்சம் வசூலித்து அசத்தியுள்ளது. இந்த படம் தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடுகிறது. ஆப்பிள் ஸ்டுடியோஸ் இந்த படத்தை 350 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியுள்ளது. இதனால் படம் லாபம் சம்பாதிக்க தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
