அவர்களுடன் நடிகைகள் மிருணாள் தாகூர், மெளனி ராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார்கள். பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதில் பலவகை வெளிநாட்டு மதுபானங்கள் பரிமாறப்பட்டிருக்கிறது. கடும் போதையில் மற்ற நடிகைகளுடன் சேர்ந்து தமன்னா டான்ஸ் ஆடிய போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ‘போதைப் பொருள் பயன்பட்டால் சினிமாத்துறையில் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற பார்ட்டிகள் அவசியமா? காவல்துறையினர் இதுபோன்ற பார்ட்டிகளையும் கண்காணிக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
