இது தொடர்பாக நடிகர் ராஜ்குமார் ராவ் பேசுகையில்;
ஆம், நான் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு, அதனால் எனக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஜ்குமார் இந்த வேடத்தில் நடிப்பார் என்று கங்குலி கூறி இருந்தார். ராஜ்குமார் கடைசியாக ‘பூல் சுக் மாப்’ படத்தில் வாமிகா கபிக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படம் மே 23 அன்று வெளியானது. விரைவில் ஓடிடியிலும் வெளியாக உள்ளது.
