நியூசிலாந்தில் 7,000 ஏக்கரில் 120 நாட்கள் படப்பிடிப்பு: கண்ணப்பா நிகழ்ச்சியில் சரத்குமார் வியப்பு

சென்னை: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு, சரத்குமார், பிரபாஸ், மோகன் பாபு, மோகன்லால், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், மதுபாலா, சம்பத் ராம், தேவராஜ் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கண்ணப்பா’. வரும் 27ம் தேதி ரிலீசாகும் இப்படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சரத்குமார், சம்பத் ராம், எடிட்டர் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் பங்கேற்றனர்.

அப்போது சரத்குமார் பேசியதாவது:
நியூசிலாந்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 120 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சிறுவயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, எதிர்த்து பேசுவது போன்ற காட்சிகள் இருக்கிறது. அந்த மனப்போரட்டத்தில் இருக்கும் தின்னா, பிறகு எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது கதை. நான் தின்னாவின் தந்தையாக நடித்துள்ளேன். முகேஷ் குமார் சிங் மகாபாரதத்தை சிறப்பாக இயக்கி வெற்றிபெற்றவர். 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மகாபாரதத்தை பிரமாண்டமாக இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

Related Stories: