பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை அருகே ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் சுற்றியுள்ள 108 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபடுவார்கள். 500 ஆண்டு கால பழமையான ஆலயத்தை கடந்த 1996ம் ஆண்டு புதுப்பித்து சம்ப்ரோஷணம் நடத்தப்பட்டது.

வாகன வசதிகள் இல்லாத காலத்தில் திருப்பதி செல்ல இயலாத இப்பகுதி மக்கள் பெருமாளை தென்திருப்பதி பெருமாள் என வழிப்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருப்பதி ஏழுமலையான் பெருமாள் போல புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆதங்கொத்தங்குடி பெருமாளை தரிசிக்க ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் விஷேசநாட்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.

Related Stories: