சென்னை: மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ரம்யா, கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது.
மாஸ் ரவி ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அப்படம் வெளிவர உள்ளது.மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து இயக்கி வருகிறார். பாடலாசிரியர் கவி சுஜய், ஆதிஷ் இசையமைத்துள்ளார். பாடலை ஏ. கே. சசிதரன் பாடியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
