சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: கமல்ஹாசன்: பஹல்காம் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எந்த விதத்திலும் பலியானவர்களின் இழப்பை ஈடு கட்ட முடியாது. மோகன்லால்: அப்பாவி உயிர்களை பறிப்பதை, எந்த ஒரு காரணத்தினாலும் நியப்படுத்த முடியாது. எனது கண்டனங்கள்.
ஆண்ட்ரியா: நாடு ஏற்கனவே பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான தருணத்தில், இச்சம்பவத்தில் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம், சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகக் கூடாது. ஜான்வி கபூர்: இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை தந்தே ஆக வேண்டும். தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பதில் நான் முன்னேறியபடி இருக்க வேண்டும். சூர்யா, ஷாருக்கான், யஷ், ரோஹித் ஷெட்டி, அக்ஷய் குமார், சஞ்சய் தத் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.