சிம்ரனை ஆன்டி என சொன்னது ஜோதிகாவா? நெட்டிசன்கள் கருத்தால் பரபரப்பு

சென்னை: ‘அந்தகன்’ படத்தில் வில்லியாக நடித்ததற்காக சிம்ரனுக்கு சமீபத்தில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற கையோடு, தன்னுடைய சக நடிகை ஒருவரின் மெசேஜ் தன்னை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை ஆதங்கத்துடன் சிம்ரன் கூறி இருந்தார். சமீபத்தில் தன்னுடன் ஏற்கனவே நடித்திருக்கும் சக நடிகை ஒருவரின் படத்தை பார்த்துவிட்டு மெசேஜ் செய்திருக்கிறார் சிம்ரன். அந்த மெசேஜில் இந்த மாதிரி நீங்கள் நடித்திருப்பது சர்ப்பிரைசாக உள்ளது என கூறியிருந்தேன். பதிலுக்கு அந்த நடிகை, ‘ஆன்டி ரோலில் நடிப்பதைவிட இது எவ்வளவோ மேல்’ என ரிப்ளை செய்திருக்கிறார்.

அந்த நடிகையின் இந்த மெசேஜ், சிம்ரனை கடும் அப்செட் ஆக்கியதாம். அதற்கு எந்தவித ரிப்ளையும் தான் கொடுக்கவில்லை என கூறிய சிம்ரன், அந்த நடிகைக்கு மேடையில் பதிலடி கொடுத்தார். ‘‘டப்பா ரோலில் நடிப்பதைவிட ஆன்டி கேரக்டரில் நடிப்பது எவ்வளவோ மேல்’’ என சிம்ரன் கூறி இருந்தார். சிம்ரன் இப்படி ஆவேசமாக பதிலடி கொடுத்த அந்த நடிகை யார் என நெட்டிசன்கள் வலைவீசி தேடி வந்தனர். சிம்ரன் வீடியோவுக்கு கீழே அந்த நடிகை இவர்தான் அவர்தான் என கமென்ட் செய்து வந்தனர்.

ஆனால் அவர் டப்பா கேரக்டர் என குறிப்பிட்டு சொன்னதால், அவர் அண்மையில் இந்தியில், ‘டப்பா கார்டெல்’ என்கிற வெப் தொடரில் நடித்த நடிகை ஜோதிகாவை தான் சொல்லி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிம்ரனும், ஜோதிகாவும் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக கொடிகட்டிப் பறந்தார்கள். வாலி படத்தில் இருவரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: