ஷோலே அல்ல; பாகுபலி கிடையாது: 100கோடி பேர் பார்த்த அமிதாப் படம்

மும்பை: இந்தியாவில் 100 கோடி பேர் பார்த்த ஒரே படம், அமிதாப் பச்சன் நடித்த தோல்விப் படம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1977ல் வெளியான ‘ஷோலே’ படத்தைதான் அதிக இந்தியர்கள் பார்த்திருந்தனர். அதன் பிறகு ஷாருக்கானின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’, இப்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி’ ஆகிய படங்கள் ‘ஷோலே’யின் சாதனையை முறியடித்தன. இந்த படங்கள் எல்லாம், தியேட்டர்களில் மட்டுமின்றி, யூடியூபில் பார்க்கப்பட்ட பார்வைகள் மூலமும் சாதனைகள் கணக்கிடப்பட்டுள்ளன. அந்த வகையில் 1999ல் அமிதாப் பச்சன், தமிழ் நடிகை சவுந்தர்யா (மறைந்த நடிகை) நடித்த ‘சூர்ய வன்ஷ்’ என்ற படம் வெளியானது.

இது தமிழில் சரத்குமார் நடித்த ‘சூர்யவம்சம்’ படத்தின் ரீமேக் ஆகும். ‘சூர்ய வன்ஷ்’ படம் அப்போது வெறும் ரூ.12 கோடியைத்தான் வசூலித்தது. இந்நிலையில் இந்த படம் டிவியில் வெளியாகி இதுவரை பலமுறை திரையிடப்பட்டு 25 கோடி பேர் வரை பார்த்துவிட்டார்களாம். கோல்ட்மைன்ஸ் என்டர்டெயின்மென்ட் யூடியூப் சேனலில் ‘சூர்ய வன்ஷ்’ படத்தை 70 கோடி பேரும் இதே நிறுவனத்தின் மற்ற யூடியூப் சேனல்களிலும் வெளியாகி அதில் 30 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது. அதாவது 100 கோடி பார்வைகளை பெற்ற முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

Related Stories: