என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் வெற்றி

சென்னை: ட்ரீம் ஹவுஸ், ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மகேந்தர் ஜெயின் தயாரிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. காவல்துறை அதிகாரி வேடத்தில் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அக்‌ஷிதா, பாலாஜி சக்திவேல், சிங்கம்புலி, சாந்தினி தமிழரசன், ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு நடிக்கின்றனர்.

‘வெப்’, ‘7/ஜி’ ஆகிய தமிழ் படங்களை தொடர்ந்து இப்படத்தை ஹாரூன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கே.வி.கிரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ராபின்ஸ் இசை அமைக்கிறார். எஸ்.வேலு அரங்குகள் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைப் பயிற்சி அளிக்கிறார். படம் குறித்து ஹாரூன் கூறுகையில், ‘இதில் வெற்றி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் நடிக்கிறார். கோவை, ஏற்காடு, கொடைக்கானல், சேலம், கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.

Related Stories: