சென்னை: நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிக்க, இசை அமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் 6 வயது சித்தார்த் பன்னீர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாடி ஆடிய ‘மிஸ் மேல கிரஷ்’ என்ற வீடியோ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.
விழாவில் தேவா, செந்தில், தம்பி ராமய்யா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், முத்துக்குமரன், ஏ.சற்குணம், இரா.சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், காயத்ரி ரகுராம், ராதிகா, சாண்டி, ராமர் ரவிகுமார், கடம்பூர் ராஜா, ரத்னம் கலந்துகொண்டனர். கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.