பேடிங்டன் இன் பெரு: விமர்சனம் ஆங் கிலம்

மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் என்ற கரடியை மையப்படுத்திய லைவ் ஆக்‌ஷன் வித் காமெடி அனிமேஷன் படமான ‘பேடிங்டன்-1’ கடந்த 2014ல் வெளியானது. 2017ல் ‘பேடிங்டன்-2’ ரிலீசானது. இவ்விரு பாகங்களை பால் கிங் இயக்கினார். 3வது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. டூகுல் வில்சன் இயக்கியுள்ளார். ஓய்வுபெற்ற கரடிகள் இல்லத்தில் வசித்த தனது அத்தை லூசியை (இமெல்டா ஸ்டாண்டன்) சந்திக்க பேடிங்டன் பெரு செல்கிறது. அங்கு அத்தை இல்லை. பேடிங்டனின் கார்டியனான பிரவுன் குடும்பத்தினர் ஹென்றி (ஹக் போன்வில்லே), மேரி (எமிலி மோர்டிமர்), ஜூடி (மேடலின் ஹாரிஸ்), ஜொனாதன் (சாமுவேல் ஜோஸ்லின்) ஆகியோர் பேடிங்டனுடன் செல்கின்றனர். இல்லத்தில் லூசி தனது கண்ணாடி மற்றும் வளையலை விட்டுவிட்டு மாயமானதை கண்டுபிடிக்கின்றனர்.

லூசியின் அறையிலுள்ள வரைபடத்தின் மர்மம், அவர்களை அமேசான் மழைக்காடுகள் வழியாகவும், பெருவின் மலைச்சிகரங்கள் வழியாகவும் எதிர்பாராத பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது. அன்டோனியோ பண்டேராஸ், தனது துணிச்சலான டீனேஜ் மகள் ஜினாவுடன் (கார்லா டவுஸ்) அமேசான் காடுகளில் பயணிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். இரு பாகங்களை போலவே பேடிங்டனின் சாகச பயணம் மாறாமல் இருக்கிறது. கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க, குழந்தைகளையும் தியேட்டருக்கு கூடவே அழைத்து செல்லலாம். பேடிங்டன் கரடிக்கு பென் விஷாவின் டப்பிங் சிறப்பாக இருக்கிறது. பால் கிங், சைமன் ஃபார்னபி, மார்க் பர்டன் ஆகியோரின் திரைக்கதை மற்றும் மைக்கேல் பாண்டின் ‘பேடிங்டன் பியர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த ஸ்கிரிப்ட்டை மார்க் பர்டன், ஜான் ஃபாஸ்டர், ஜேம்ஸ் லாமண்ட் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Related Stories: