சென்னை: நட்டி, பூனம் பஜ்வா நடித்த ‘குருமூர்த்தி’ படத்தை இயக்கிய கே.பி.தனசேகர் அடுத்து இயக்கும் படம் ‘பூங்கா’. ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அகமது விக்கி இசை அமைக்கிறார். கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமுலட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். கதாநாயகனாகப் புதுமுகங்கள் கவுசிக், நாயகியாக ஆரா நடிக்கின்றனர். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
“பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமமான ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது மண் மீதுள்ள சொர்க்கம். ஒரு நான்கு பேர், தங்களுக்கான பிரச்சினைகளோடு பூங்காவுக்கு வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சினை எப்படித் தீர்கிறது என்பது கதை” என்றார் இயக்குனர்.