மும்பை: இந்தியில் கடந்த 2018ல் அஜய் தேவ்கன் நடித்து வெற்றிபெற்ற படம், ‘ரெய்டு’. இதன் 2வது பாகம் ‘ரெய்டு 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘நஷா’ என்ற பாடலுக்கு தமன்னா படுகவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல மாடல் அழகி ஊர்வசி ரவுட்டேலா, ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் பிரபலமாகி வருகிறார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான ‘ஜாட்’ என்ற இந்தி படத்தில், ‘ஸாரி போல்’ என்ற பாடலுக்கு அவர் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அவரது தீவிர ரசிகர் ஒருவர், ‘நஷா’ என்ற பாடலை விட இப்பாடல் மிகச்சிறப்பாக இருக்கிறது என்று, தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கமென்ட்டை பதிவிட்டார்.
அந்த கமென்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஊர்வசி ரவுட்டேலா, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே அதை டெலிட் செய்துவிட்டார். அந்த சில நிமிடங்களுக்குள் யாரோ ஒருவர் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையதளங்களில் வைரலாக்கிவிட்டார். தொடர்ந்து மற்றவர்களின் செயல்பாடுகளை கிண்டலடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ஊர்வசி ரவுட்டேலா, இப்போது தமன்னாவின் படுகவர்ச்சி நடனத்தை வேண்டுமென்றே சீண்டி பார்த்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்பு கியாரா அத்வானி, இயக்குனர் ஷங்கர் ஆகியோரை பற்றியும் ஊர்வசி ரவுட்டேலா கிண்டலடித்து பதிவிட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.