சென்னை: தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் யோகிபாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் இரும்புக் கடையில் பணியாற்றும் தொழிலாளியாக யோகி பாபு நடிக்கிறார்.