வெளியான 11 நாட்களிலேயே எ மைன்கிராஃப்ட் மூவி படம் ரூ.4,700 கோடி வசூலித்து சாதனை

லாஸ்ஏஞ்சல்ஸ்: வார்னர் பிரதர்ஸ் மற்றும் லெஜண்டரியின் ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் $550 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 11 நாட்களில், சாண்ட்பாக்ஸ் வீடியோ கேம் மைன்கிராஃப்டை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், அமெரிக்காவில் $281 மில்லியனையும், சர்வதேச அளவில் $269.6 மில்லியனையும் ஈட்டியுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் வசூலித்துள்ள தொகைதான் ரூ.4 ஆயிரத்து 700 கோடியாகும் (இந்திய மதிப்பில்). இந்தப் படத்தில் ஜேசன் மோமோவா, ஜாக் பிளாக், ஜெனிஃபர் கூலிட்ஜ், டேனியல் ப்ரூக்ஸ், எம்மா மியர்ஸ் நடித்துள்ளனர். இவர்கள் விசித்திரமான விலங்குகள் நிறைந்த ஓர் உலகில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து எப்படி தப்பிப் பிழைத்தார்கள் என்பதை படு சுவாரஸ்யமாகவும் வேகமாகவும் இந்த படம் சொல்கிறது.

அனிமேஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த 3டி படமாக இது உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்த படம் ரிலீசானது. இந்தப் படம் $157 மில்லியன் ஓபனிங் வசூலுடன் அறிமுகமானது, அன்றிலிருந்து அதன் புகழ் அதிகரித்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் எண்கள் மற்றும் தரவரிசைகளை விட, ரசிகர்களின் ஆதரவு படத்தின் மகத்தான வெற்றிக்கு மற்றொரு சான்றாகும். வெளிநாடுகளில் இந்த படத்தை திரையிடும் முன் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. காரணம், படம் ஓடும்போது, 3டி காட்சிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது. அத்துடன் கையில் இருக்கும் பாப்கார்னையெல்லாம் தூக்கி வீசி இளம் ரசிகர்கள் படத்தை என்ஜாய் செய்யும் காட்சிகளும் தியேட்டர்களில் தினமும் அரங்கேறி வருகிறதாம்.

Related Stories: