தினேஷ் மாஸ்டருடன் இணைந்த காவியா

சென்னை: ஸ்ரீ மலை மாதேஸ்வரா புரொடக்ஷன் ஹனு ஆனந்த் தயாரிப்பில் ‘துணிந்து செய் வெல்வது நாமே’ படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, இத்திரைப்படத்தின் முதல் பாடலை முடித்திருக்கிறது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மற்றும் சொப்பண சுந்தரி நான்தானே காவியாவும் நடனமாடியிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை என். கார்த்திக் இயக்குகிறார். மகேஷ் தியாகராஜன் ஒளிபதிவு செய்திருக்கிறார். ராம்நாத் எடிட்டிங் செய்திருக்கிறார். நரேஷ் இசையமைத்திருக்கிறார். கோலி சோடா உதய்தீப், பசங்க பாண்டி, கலையரசன், கண்ணுசாமி, அறிமுகமாக என். ரமேஷ்குமார், ரண்வித்தா செண்ணப்பா, லத்திகா, கிரண்குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள் இதில் ஹனு ஆனந்த், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மீசை ராஜேந்திரன், வானத்தைப் போல செங்கேனி நடித்துள்ளார்கள்.

Related Stories: