சிக்கந்தர் தோல்வி எதிரொலி: பிரபாஸ் படத்திலிருந்து ராஷ்மிகா நீக்கம்

மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்த ‘சிக்கந்தர்’ இந்தி படம் வெளியாவதற்கு முன்பு இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிப்பார் என்று பேசப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்படுகிறது.

திரைப்பட குழு இது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது. ஆனால் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சிக்கந்தர்’ தோல்வியடைந்ததால் இந்த திரைப்படத்தில் அவருக்கு பதிலாக வேறு கதாநாயகியை தேர்வு செய்ய இயக்குனர் தரப்புக்கு தயாரிப்பாளர் சார்பில் அழுத்தம் தரப்படுகிறதாம். ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால் தற்போது வேறு கதாநாயகியை தேர்வு செய்ய திரைப்பட குழு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: