ஆனால், அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்த விஷயம் இப்போதுதான் கசிந்துள்ளது. இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’.
இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்திருந்தார். இப்படத்தில் பவன் கல்யாணின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டுள்ளனர். ஆனால், அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பதால், அப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க நயன்தாராவிற்கு ஆசை இருந்தபோதும் கூட, அந்த கதாபாத்திரம் சிறுது என்பதன் காரணமாகவே இப்படத்தில் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.