நல்ல கேரக்டர்களில் நடிப்பதே லட்சியம்: சரண்யா ரவிச்சந்திரன்

சென்னை: ‘க.மு க.பி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சரண்யா ரவிச்சந்திரன். அவர் கூறியது:
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’, நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘லப்பர் பந்து’ தினேஷ் உடன் ஒரு படமும் அதே நிறுவனத்தில் இன்னொரு படமும் செய்கிறேன். வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’, மிஷ்கினின் ‘டிரெய்ன்’ படங்களிலும் நடித்து வருகிறேன். ‘க.மு க.பி’ படம் எனக்கு சவாலாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக 10 நாட்கள் ரிஹர்சல் நடந்தது. அது பயனுள்ளதாக அமைந்தது. காதலுக்கு முன்பான வாழ்க்கை திருமணத்துக்கு பின்பான வாழ்க்கை என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

அந்த இரண்டையும் வித்தியாசப்படுத்தி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. திருமணத்துக்கு முன்பு காதலிக்கும்போது இருக்கும் புரிதல் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்தால் எந்த பிரச்னையும் இல்லை. இதைத்தான் படமும் சொன்ன விஷயம். படம் பார்த்த பலரும் எனது நடிப்பை பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்துக்கு டைரக்டர் கொடுத்த ஐடியாபடி நானே எனக்கு காஸ்டியூம்களை வடிவமைத்தேன். தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.

Related Stories: