சென்னை: நடிகர் சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி ஊக்கபடுத்தினார். சௌந்தரராஜா கூறும்போது, ‘‘விவசாயிகளை கவுரவிப்பதை நான் பிறந்த பிறப்பிற்கு கிடைத்த மிக பெரிய அர்த்தமாக உணர்கிறேன். இது முதல் கட்டம்தான். இனி இந்த பணி தொடரும். தமிழக அரசுக்கு கோரிக்கையாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நம்மாழ்வார் ஐயாவிற்கு மணிமண்டபமும், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடநூலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
மரங்களை நட்டு வைப்பதை விட அதை பராமரிப்பு கண்டிப்பாக செய்ய வேண்டும்., நிறைய மரங்களை நட வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம்’’ என்றார். இந்த நிகழ்வில் நம்மாழ்வாரின் நண்பர், நெல் ஜெயராமனின் உறவினரும் கலந்து கொண்டனர்.