ஒரே நேரத்தில் டி.வியிலும், ஓடிடியிலும் வெளியாகும் கிங்ஸ்டன்

சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் திரைக்கு வந்த 25வது படம், ‘கிங்ஸ்டன்’. கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், இளங்கோ குமரவேல், அழகம்பெருமாள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்ததுடன், ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்திருந்தார். இப்படத்தின் டி.வி ஒளிபரப்பு, ஓடிடி வெளியீடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்கிறது.

வரும் 13ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஜீ டி.வியில் ‘கிங்ஸ்டன்’ படம் ஒளிபரப்பாகிறது. அதே நேரத்தில் ஜீ5 ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகிறது. ஒரே நேரத்தில் ஒரு படம் இரு தளங்களில் வெளியாவது தமிழ் சினிமாவில் முதல்முறையாக நடக்கிறது என்று கூறப்படுகிறது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ என்ற படத்தை இதே முறையில் ஜீ நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

Related Stories: