க.மு க.பி விமர் சனம்

கல்யாணத்துக்கு முன்பு உயிருக்குயிராக காதலிப்பவர்கள், கல்யாணத்துக்கு பிறகு சின்னச்சின்ன பிரச்னையையும் பெரிதாக்கி சண்டை போட்டு, விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சம்பவத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ஐடி கம்பெனியில் பணியாற்றும் விக்னேஷ் ரவியும், சரண்யா ரவிச்சந்திரனும் காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். பிறகு திரைப்படம் இயக்கும் ஆர்வத்தால் வேலையை விட்டுவிடும் விக்னேஷ் ரவிக்கு சரண்யா ரவிச்சந்திரன் உதவுகிறார். ஆனால், நாளடைவில் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட சரியான தீர்வு காண முடியாமல் சண்டை போடுகின்றனர்.

இதனால், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து கோர்ட்டுக்கு செல்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. முழுநீள காதல் கதையை நான்லீனியர் முறையில், விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம். விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன் ேஜாடியின் காதலும், மோதலும் சுவாரஸ்யம் அளிக்கிறது. அவர்களுக்கு இடையிலான கருத்து மோதல்கள் இயல்பாக இருக்கிறது. மனைவியை காலடி யில் அடக்கி ஆள நினைக்கும் நிரஞ்சனின் அடாவடித்தனமும், அவரது மனைவி அபிராமி முருகேசனின் ஆவேசமும் யதார்த்தம். மற்றும் டிஎஸ்கே, பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், ‘அருவி’ பாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கதை மற்றும் காட்சிகள், கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப ஜி.எம்.சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷமந்த் நாக் இசையில் ஒரு பாடல் கதையுடன் பயணித்துள்ளது. தேவைக்கு ஏற்ப தர்ஷன் ரவிகுமாரின் பின்னணி இசை இடம்பெற்றுள்ளது. குழப்பங்கள் ஏற்படுத்தாத சிவராஜ் பரமேஸ்வரனின் எடிட்டிங் சிறப்பு. காதலிக்கும் போது காட்டும் அதே அன்பையும், அக்கறையையும், புரிதலையும் கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்தால் வாழ்க்கை இனிக்கும் என்ற கருத்தை சொன்ன இயக்குனரை பாராட்டலாம். பிலிம் மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

Related Stories: