அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்தார். பிறகு மேலும் ஒரு டிவிட்டில், பவன் கல்யாணின் இந்தி திணிப்பு ஆதரவு பேச்சை கோடிட்டு, ‘‘தேர்தலுக்கு முன் ஜனசேனாவாக இருந்த இவரது கட்சி, இப்போது பஜன் சேனாவாக மாறிவிட்டது’’ என கடுமையாக சாடியுள்ளார். 2014ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பவன் கல்யாண் பேசிய பேச்சுகளை இப்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். ‘இரட்டை வேடம் போடும் பவன் கல்யாண்’ என்றும் கடுமையாக அவரை விமர்சித்துள்ளனர்.
