கொழும்பு: ஷான் புத்தா என்ற இலங்கையின் பிரபல ராப் இசை பாடகர், கொழும்புவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹோமாகம தலைமையக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி போலீசிடமிருந்து திருடப்பட்டது என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் பாடகரின் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில காவல் நிலையத்தில் பணியின்போது இந்த துப்பாக்கியை திருடி ஷானிடம் வழங்கியுள்ளார். எதற்காக இந்த துப்பாக்கியை ஷான் வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.