பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)

ஸ்யாமாகாசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மநாமனனே

ஸீமாஸுன்ய கவித்வ வர்ஷ ஜனனீயா காபி காதம்பினீ

மாராராதி மனோவிமோஹனவிதௌ காசித்தம: கந்தலீ

காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷ லஹரீ காமாய மே கல்பதாம்

                                                                                        

 - மூக பஞ்சசதீ

பொதுப் பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்கள் கண்களை நிகரற்ற கருப்பு நிறமுள்ள சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போலவும் காண்கிறேன். அந்த உன் கருணா கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன், தாயே!

(இத்துதியை ஜபம் செய்தால் தேவியின் திருவருளால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.)

Related Stories:

>