சென்னை: ‘டிராகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதையடுத்து ‘பர்தா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பர்தா அணியும் கிராமத்து பெண்களின் நிலையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அனுபமா – சமந்தா இருவரும் இணைந்து நடித்த ‘அ ஆ’ என்ற தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
