கிளி வடிவில் வந்த அம்பிகை: கல்யாண காமாட்சி

தர்மபுரி

கல்யாண காமாட்சி

தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மல்லிகார்ஜுனர் சமேத கல்யாண காமாட்சி திருத்தலம் உள்ளது. குமார சம்பவம் நிகழ வேண்டி மன்மதன் ஈசனின் மேல் தன் பாணத்தைத் தொடுக்க ஈசன் மன்மதனை எரித்த தலம் இது. அதே சம்பவம் நிகழ்வதற்காக ஈசனுடன் கலக்க, தேவி சக்ர பீடத்தில் தவம் செய்த தலமும் இதுவே. தேவியின் 16 கலைகளோடு, வாராகி, மாதங்கியும் சேர்ந்து 18 யானைகள் வடிவில் தாங்கும் ஸ்ரீசக்ர சந்நதியில் போக காமாட்சியாக அருள்கிறாள்.

ஈசனின் கருவறை விமானத்தை விட கல்யாண காமாட்சியின் கருவறை விமானம் பெரியது. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீர அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமபிரான் இத்தல காமாட்சியை பூஜை செய்து வசந்த நவராத்திரி கொண்டாட்டத்தை தொடங்கினார். அன்னையின் தேர் போன்ற அமைப்பில் உள்ள கருவறையில் அப்பிரதட்சிணமாக, மேற்குப்புறம் ராமாயணக் கதைகள் சொல்லும் சம்பவ சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன.

அம்பிகையின் சந்நதியை வலமிருந்து இடமாக பிரதட்சிணம் செய்தால் உலக இன்பங்கள் பெருகும். இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்தால் முக்தி கிட்டும். அம்பிகையை தரிசிக்க 18 படிகளைக் கடந்துச் செல்ல வேண்டும். இவை சத்தியப்படிகள் என அழைக்கப்படுகின்றன. அமாவாசை தினங்களில் பெண்கள் இந்த திருப்படிகளுக்கு பூஜைகள் செய்கின்றனர்.

திருமண வரம் தருவதில் நிகரற்றவள் இந்த கல்யாணகாமாட்சி என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.  தர்மபுத்திரரால் 27 மூல மந்திரங்களால் அர்ச்சிக்கப்பட்ட சூலினி எனும் ராஜதுர்க்கை இத்தலத்தில் அருளாட்சி புரிந்து வருகிறாள். ஒவ்வொரு தை மாதமும் இத்தலத்தில் சண்டி ஹோமம் மிக விமரிசையாக

நடைபெறுகிறது.

Related Stories: