பலன் தரும் ஸ்லோகம்(கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)

திருக்கார்த்திகை தினத்தன்று அகல் விளக்கில் தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம்...

‘‘கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

ஸுகின பவந்து ச்வபசா ஹி விப்ரா’’

பொருள் :  ‘‘புழுக்களோ, பட்சிகளோ அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற விசயமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’’ என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

Related Stories: