மூக்குத்தி அம்மன் 2 வில்லனாக அருண் விஜய்

சென்னை: கடந்த 2020ல் நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். மற்றும் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா ரவிச் சந்திரன் நடித்திருந்தனர். காமெடி பேண்டஸி ஜானரில் உருவான இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

தற்போது இதன் 2வது பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், ரவுடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ், ஐவிஒய் எண்டர்டெயின் மெண்ட், பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் தொடக்க விழா பூஜை வரும் 6ம் தேதி நடக்கிறது. 15ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக சென்னையில் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதிலும் மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக அருண் விஜய் நடிக்க பேச்சுவாரத்தை நடந்து வருகிறது.

Related Stories: