பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக ஆதி

ஐதராபாத்: போயபதி னு இயக்கத்தில் 4வது முறையாக பாலகிருஷ்ணா நடிக்கும் படம், ‘அகண்டா 2: தாண்டவம்’. இது ‘அகண்டா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. ஆக்‌ஷனுக்கும், ஆன்மீகத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. எம்.தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும் ‘14 ரீல்ஸ் பிளஸ்’ சார்பில் ராம் அச்சந்தா, கோபிசந்த் அச்சந்தா தயாரிக்கின்றனர். பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக ஆதி பினிஷெட்டி நடிக்கிறார். இதற்கு முன்பு ‘சர்ரைனோடு’ படத்தில் ஆதி பினிஷெட்டியை நடிக்க வைத்த போயபதி னு, இப்போது 2வது முறையாக அவருடன் சேர்ந்துள்ளார்.

பாலகிருஷ்ணா, ஆதி பினிஷெட்டி இடையிலான மோதல் காட்சிகள், ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில், 7 ஏக்கர் பரப்பளவில் ஏ.எஸ்.பிரகாஷ் குழுவினரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. சண்டைக்காட்சியை ராம், லஷ்மன் வடிவமைத்துள்ளனர். ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். பான் இந்தியா படமான இது, தசரா பண்டிகையையொட்டி, வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories: