மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு பெண் இயக்குனர் சரமாரி முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐஸ்வர்யா ராயை காதலித்து மணந்த அபிஷேக் பச்சன், இந்தி சினிமாவில் தந்தை அமிதாப் பச்சன் போல் புகழ் பெற முடியவில்லை. இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இது பற்றி இருவரும் சில காலம் பதில் கூறாமல் இருந்தனர்.
இதற்கிடையே ஒரு நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்து அந்த தகவல் உண்மையில்லை என்பதுபோல் சூசகமாக தெரிவித்தனர். இருந்தாலும் இவர்களுக்கு இடையே ஏதோ பிரச்னை ஓடுகிறது என பாலிவுட் மீடியா இப்போதும் கூறி வருகிறது. ஐஸ்வர்யா ராயின் சில நடவடிக்கைகள் மாமியார் ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் குடும்பத்துக்குள் புகைச்சல் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம், நடிகை நிம்ரத் கவுருடன் அபிஷேக் பச்சன் நெருங்கிப் பழகி வருவதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் அபிஷேக் பச்சன், தனது 49வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இதற்காக அவர் நைட் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். இதில் கலந்துகொண்ட பெண் இயக்குனர் பர்ஹா கான், ஒரு கட்டத்தில் அதிகமாக மது குடித்தார். பிறகு அபிஷேக் பச்சனுக்கு திடீரென கன்னத்தில் சரமாரியாக முத்த மழை பொழிந்தார். அங்கிருந்த பலரும் அதை தங்களது மொபைலில் படம் பிடித்தனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களால் ஏற்கனவே அபிஷேக் மீது கோபத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராய் இப்போது அப்செட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
