சென்னை: ‘அகத்தியா’ கேம் மற்றும் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக, அகத்தியா திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் ஜீவா இது குறித்துக் கூறும்போது, ‘என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இந்த முயற்சி ‘அகத்தியா’ திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்’ என்றார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், ஐசரி கே. கணேஷ் மற்றும் அனீஷ் அர்ஜுன் தேவ் சார்பில் வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா) இணைந்து தயாரித்துள்ளது. விழாவில் பட நாயகி ராஷி கன்னா, படத்தின் இயக்குனர் பா.விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். பான் இந்தியா படமாக ஜனவரி 31ம் தேதி ரிலீசாகிறது.