விரைவில் காந்தாராவின் இரண்டாம் பாகம்

இந்திய சினிமாவில் வெளியான சில நாட்களிலேயே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கன்னட திரைப்படம் காந்தாரா. வட்டார தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது. படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெள்யிடப்பட்டது. ஏனெனில் படம் இப்படியான ஒரு வரவேற்பை பெறும் என இயக்குனர், தயாரிப்பாளர் யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கர்நாடகாவில் உள்ள பஞ்சுருளி என்கிற வட்டார தெய்வத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தையும் இயக்கியது. இன்று காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இதில் படத்தின் இயக்குனரும், கதாநாயகனும் ஆன ரிஷப் ஷெட்டி கலந்துக்கொண்டார். அப்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என அவரிடம் கேட்கப்பட்டது. ஏற்கனவே நீங்கள் பார்த்ததுதான் காந்தாராவின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இனிமேல்தான் எடுக்கப்போகிறோம் என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. இதன் மூலம் காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதியாகியுள்ளது.

Related Stories: